Sunday 10 December 2023

ஏனோ

பள்ளிப்பருவத்தில் பலமுறை
ஆசைப்பட்டேன்!
பலநூறு கவி எழுத!
ஏனோ தெரியவில்லை 
எழுத அல்ல ஏன் எழுதவில்லை என்று!
-சி. எட்வின் சிங்

Wednesday 15 May 2019

நண்பனே

நட்பு அது சொல் அல்ல
வாழ்வு!
நட்பாய் எனில் கலந்த
நண்பா!
ஆயிரம் தடையிலும் நெஞ்சுநிமிர்
நின்றாயே!
காலன் ஒரு கோழை ஆனான்
உன்னால்!
பின்நின்று வீழ்த்தி விட்டானே
உன்னை!

உயிரினில் கலந்த நண்பா
நீ தந்த நினைவலைகள் மனக்கடலில்
அலையலையாய்!
வாழ்க்கை தருணங்களில் தேடுகிறேன்
உனையே!

நீ இல்லா வாழ்வு முழுமையில்லை
முடிவுமில்லை!
நண்பனே!

- சி. எட்வின் சிங்

Friday 30 November 2018

சிரிப்பு

மனம் முழுமையும்
மரண ஓலை!
முகம் மழுமையும்
மகிழ்ந்த சிரிப்பு!
மனிதன்.


- எட்வின் சிங் சி.

Saturday 11 August 2018

காற்று மா(கா)சு

அய்யாறு ஆண்டுமுன்
அய்யா அருந்தும் நீர்
காசுக்காக வரும் என்றான்...
நகைத்தவரே நாம்!

எண்ணி சில ஆண்டுகளில்
காற்றும் வரும் காசுக்காக...
மாசு நீக்கி நாம் காப்பின்
ஓசி காற்று நம் பிள்ளைக்கு...

-எட்வின் சிங் சி.

Sunday 28 January 2018

Thursday 2 November 2017

ஹைக்கூ

கார்மேகம்
காடுமலை மேல்
கொண்ட காதல்..
மழை!


- எட்வின் சிங் சி.